என் தமிழ்

தீபாவளி : 2027 முதல் நாடு முழுவதும் தொடர்ந்து 2 நாட்கள் பொது விடுமுறை – பிரதமர் அன்வார் அறிவிப்பு

கோலாலம்பூர், 13 நவம்பர் 2026 : மலேசியாவில் 2027ஆம் ஆண்டு முதல் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் தொடர்ந்து இரண்டு நாட்கள் பொது விடுமுறை வழங்கப்படும் எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

மலேசியாவில் வாழும் இந்து சமூகத்தினருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அவர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடுவதற்கு போதிய வாய்ப்பளிக்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மலேசியா பல இனங்களும் பல சமயங்களும் இணைந்து வாழும் நாடாகும். ஒவ்வொரு பண்டிகையும் மக்களிடையே நல்லிணக்கம், மரியாதை மற்றும் ஒற்றுமையை வளர்ப்பதில் தனித்துவமான பங்கைக் கொண்டுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, 2027ஆம் ஆண்டு முதல் தீபாவளியை முன்னிட்டு நாடு முழுவதும் தொடர்ந்து இரண்டு நாட்கள் பொது விடுமுறை அமல்படுத்தப்படும் எனப் பிரதமரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top