என் தமிழ்

தீபாவளி சிறப்புத் குறும்படம் : குடும்ப உறவுகளின் அழகான தருணங்களைப் பகிரும் செல்காம் டிஜியின் ‘இணைக்கும் அழைப்பு’

பெட்டாலிங் ஜெயா, 30 அக்டோபர் 2026 : இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு, குடும்ப உறவுகளின் அன்பையும் ஒற்றுமையையும் எடுத்துரைக்கும் வகையில், செல்காம் டிஜி நிறுவனம் ‘இணைக்கும் அழைப்பு’ (Inaikkum Alaippu – The Call That Connects) என்ற தலைப்பில் சிறப்புக் குறும்படத்தை வெளியிட்டுள்ளது.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அழகான குடும்பப் புகைப்படம் எடுக்க முயற்சிக்கும் ஒரு குடும்பத்தின் அனுபவங்களை மையமாகக் கொண்டு இக்குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியும் பரபரப்பும் நிறைந்த சூழலில், குடும்பப் புகைப்படம் எடுக்கும் முயற்சியில் பல எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்கின்றன. இறுதியில், சிறந்த நினைவுகள் என்பது குறைபாடற்ற புகைப்படத்தில் மட்டும் இல்லை; குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளும் சிரிப்பு, மகிழ்ச்சி மற்றும் அன்பான தருணங்களில்தான் இருக்கின்றன என்பதை இக்கதை உணர்த்துகிறது.

ஒரே வீட்டில் ஒன்றுகூடி கொண்டாடினாலும், தொலைதூரத்தில் இருந்தபடி பண்டிகையைக் கொண்டாடினாலும், தொழில்நுட்ப இணைப்பு குடும்ப உறவுகளை நெருக்கமாக வைத்திருக்க உதவுகிறது என்பதையும் இக்குறும்படம் எடுத்துக்காட்டுகிறது.

20 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்களைத் தொடர்பில் வைத்திருக்கும் தனது நோக்கத்தின் ஒரு பகுதியாக இந்தக் குறும்படத்தைச் செல்காம் டிஜி உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு தொலைபேசி அழைப்பு, குறுஞ்செய்தி மற்றும் இணையப் பயன்பாட்டிற்குப் பின்னாலும் மனிதர்களின் உணர்வுகளும் உறவுகளும் நிறைந்த கதைகள் உள்ளன என்பதை இக்குறும்படம் வலியுறுத்துகிறது.

இதுகுறித்து செல்காம் டிஜியின் வர்த்தகச் சின்னம் மற்றும் சந்தைப்படுத்தல் சேவைகள் பிரிவுத் தலைவர் சான் மே லிங் கூறுகையில், தீபாவளி என்பது குடும்பங்கள் ஒன்றுகூடி உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ளவும், பாரம்பரியங்களைப் பேணவும், மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கவும் உதவும் சிறப்பான பண்டிகையாகும் என்றார்.

“வாழ்க்கையில் அனைத்தும் நாம் எதிர்பார்த்தபடி நடைபெறாவிட்டாலும், சில எதிர்பாராத தருணங்களே மிகவும் அழகான நினைவுகளாக மாறிவிடுகின்றன. மலேசியக் குடும்பங்கள் பலரும் அனுபவித்திருக்கும் இத்தகைய தருணங்களை மையமாகக் கொண்டே இந்தக் குறும்படத்தை உருவாக்கினோம்.

“மக்களை ஒருவருக்கொருவர் நெருக்கமாக இணைக்கும்போதுதான் தொழில்நுட்பத்தின் உண்மையான பயன் வெளிப்படுகிறது. எங்கள் தொலைத்தொடர்பு சேவையின் ஒவ்வொரு இணைப்பும் ஒரு உறவு, உரையாடல், சந்திப்பு அல்லது மறக்க முடியாத நினைவுடன் தொடர்புடையது. மக்களுக்கு முக்கியமானவர்களுடன் அவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்க உதவுவதே எங்களது நோக்கம்,” என அவர் தெரிவித்தார்.

இந்தத் தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் ஒன்றுகூடும் மலேசியர்கள், குறைபாடுகளுடன் இருந்தாலும் அழகான நினைவுகளை உருவாக்கும் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என செல்காம் டிஜி நிறுவனம் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

குறும்படத்தை காண : https://youtu.be/_MsfUROLmqQ?si=_oabwfqOmVSH4Zxk

Scroll to Top