செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலத்தை அனுப்பிய இந்தியாவின் அபார சாதனைக்கு சீனா, அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.இது குறித்து சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சன்யிங், மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்திருக்கும் இவ்வேளையில் இந்தியாவை பாராட்டுகிறோம். இது இந்தியாவுக்கு பெருமை. ஆசியாவுக்கு பெருமை.
விண்வெளியில் மனித குல ஆராய்ச்சியில் இது ஒரு மைல்கல் முன்னேற்றம். எனவே, இதற்காக இந்தியாவை பாராட்டுகிறோம் என கூறியுள்ளார். இது தொடர்பாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் திட்டம் வெற்றி பெற்றிருப்பதற்காக இந்தியாவையும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பையும் இஸ்ரோ அமெரிக்க தூதரகம் பாராட்டுகிறது.
செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் மங்கள்யான் நுழைந்து சாதனை படைத்திருப்பதின் மூலம், விண்வெளி துறையில் சாதனை படைத்துள்ள உயர்வரிசை நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.