என் தமிழ்

புக்கிட் மெர்தாஜாமில் 36 B40 குடும்பங்களுக்கு தீபாவளி அட்சய பாத்திரம் வழங்கிய மலேசிய இந்து சங்கம்

பினாங்கு, 07 நவம்பர் 2026 : மலேசிய இந்து சங்கத்தின் புக்கிட் மெர்தாஜாம் வட்டாரப் பேரவையும், பினாங்கு மாநிலப் பேரவையும் இணைந்து நடத்திய ‘தீபாவளி அட்சய பாத்திரம் 2026’ திட்டத்தின் மூலம், பி40 பிரிவைச் சேர்ந்த 36 குடும்பங்களுக்கு அட்சய பாத்திரத் தொகுப்புகள் வழங்கப்பட்டன.

கடந்த நவம்பர் 5ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு, புக்கிட் மெர்தாஜாமில் உள்ள கோப்பராசி கெமajuan பெர்சாமா மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மலேசிய இந்து சங்கத்தின் பினாங்கு மாநிலப் பேரவையின் துணைத் தலைவர் விவேகா ரத்னா சத்தியசீலன் சுப்ரமணியம் (PJM), புக்கிட் மெர்தாஜாம் வட்டாரப் பேரவையின் தலைவர் விவேகா ரத்னா ஏ. ஜான் ஜெய்சன் மற்றும் வட்டாரப் பேரவை உறுப்பினர்கள் முன்னிலையில் அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

தீபாவளியை முன்னிட்டு தேவையுள்ள குடும்பங்களின் இல்லங்களில் மகிழ்ச்சியையும் பண்டிகை உணர்வையும் ஏற்படுத்துவதுடன், சமூக நலனுக்காக ஆலய நிர்வாகங்களின் சேவை முயற்சிகளை வலுப்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இம்முயற்சி வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய ஆலயத் தலைவர் மற்றும் நிர்வாகத்தினர், மலேசிய இந்து சங்கத்தின் புக்கிட் மெர்தாஜாம் வட்டாரப் பேரவைத் தலைவர் மற்றும் குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள் ஆகியோருக்கு ஏற்பாட்டாளர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

தீபாவளியின் ஒளி, கருணை, ஈகை மற்றும் ஒற்றுமை ஆகிய உயரிய பண்புகள் தொடர்ந்து சமூகத்தினரிடையே நிலைத்து, உதவி தேவைப்படுவோரின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வாழ்த்தினர்.

Scroll to Top