பெர்லிஸ், 05 நவம்பர் 2026 : பெர்லிஸ் மாநிலத்தின் N.04 மாத்தா ஆயர் (Mata Ayer) சட்டமன்றத் தொகுதியில் ஏற்பட்டுள்ள காலியிடத்துக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என மலேசியத் தேர்தல் ஆணையம் (SPR) அறிவித்துள்ளது. குறித்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வான் பதாரியா பிந்தி வான் சாத் (Wan Badariah binti Wan Saad) கடந்த அக்டோபர் 31ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து இந்தக் காலியிடம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக, பெர்லிஸ் மாநில சட்டமன்ற சபாநாயகர் துவான் ருஸ்ஸெலே பின் ஈசான் (Tuan Rus’sele bin Eizan) கடந்த நவம்பர் 4ஆம் தேதி தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பெர்லிஸ் மாநில அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 55(5)-இன்படி, இந்தக் காலியிடத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை என சபாநாயகர் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், N.04 மாத்தா ஆயர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரம்லான் பின் டத்தோ ஹாருன் வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.







