பெட்டாலிங் ஜெயா, 05 நவம்பர் 2026 : உம்ரா பயணம் மேற்கொள்ளும் மலேசியர்களின் தகவல் தொடர்பு வசதியை மேம்படுத்தும் நோக்கில், செல்காம்டிஜி (CelcomDigi) நிறுவனம் 15 நாள் சிறப்பு உம்ரா ரோமிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. RM100 விலையில் வழங்கப்படும் இந்தச் சேவையில், அதிவேக இணையப் பயன்பாடு, தொலைபேசி அழைப்புகள் மற்றும் ஆறு நாடுகளுக்கான ரோமிங் வசதிகள் ஒரே தொகுப்பில் வழங்கப்படுகின்றன.
இதன் மூலம் சவூதி அரேபியாவில் தங்கியிருக்கும் காலம் முழுவதும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதுடன், பயணத்தின் முக்கிய தருணங்களையும் காணொளி அழைப்புகள் மூலம் பகிர்ந்துகொள்ள முடியும்.
இந்த 15 நாள் தொகுப்பில் 100GB அதிவேக இணையத் தரவு, 1Mbps வேகத்தில் வரம்பற்ற இணையப் பயன்பாடு, மலேசியாவிலிருந்து வரும் உள்வரும் அழைப்புகளுக்கு இலவச வரம்பற்ற வசதி மற்றும் வெளிநாட்டு அழைப்புகளுக்கு 30 நிமிடங்கள் வழங்கப்படுகின்றன.
மேலும், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள், கத்தார், துருக்கி, ஓமான் மற்றும் குவைத் ஆகிய ஆறு நாடுகளில் இந்த ரோமிங் சேவையைப் பயன்படுத்தலாம். சவூதி அரேபியாவில் Zain, Mobily மற்றும் STC உள்ளிட்ட முக்கிய தொலைத்தொடர்பு வலையமைப்புகளையும் அணுக முடியும்.
செல்காம்டிஜி பிரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள், தங்களது பயணத்திற்கு 14 நாட்களுக்கு முன்பே CelcomDigi செயலி மூலம் இச்சேவையை முன்பதிவு செய்யலாம். இதனால் குறிப்பிட்ட நாடுகளைச் சென்றடைந்ததும் ரோமிங் வசதியைப் பயன்படுத்த முடியும்.
செல்காம்டிஜி வாடிக்கையாளர்களாக இல்லாதவர்களும், நிறுவனத்தின் இணைய விற்பனைத் தளம், விற்பனை நிலையங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் வழியாக 15 நாள் உம்ரா தொகுப்பு அல்லது eSIM வசதியைப் பெற்றுக்கொள்ளலாம்.







