திரெங்கானு, 04 நவம்பர் 2026 : உலகெங்கிலும் உள்ள தமிழிளையோரை ஒரே தளத்தில் ஒன்றிணைத்து, அவர்களின் சிந்தனைகள், கருத்துகள், திறமைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் நடைபெறவுள்ள அனைத்துலகத் தமிழிளையோர் மாநாடு 2.0-இல் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்க விரும்பும் இளையோருக்கான பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
2025-2026ஆம் ஆண்டுக்கான பரதம் பண்பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இம்மாநாடு வரும் நவம்பர் 21, 2026 அன்று காலை 9 மணி முதல் திரெங்கானு மாநிலத்திலுள்ள மலேசியத் திரெங்கானு பல்கலைக்கழகத்தின் சுல்தான் மிசான் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மலேசியா முழுவதும் வாழும் தமிழிளையோர் இம்மாநாட்டில் பங்கேற்று, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வருகைதரும் தமிழிளையோருடன் கலந்துரையாடவும், தங்களது கருத்துகள் மற்றும் சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் பங்கேற்பதற்கான பதிவுக் கட்டணம் உள்நாட்டு மற்றும் அனைத்துலகப் பிரதிநிதிகள் என இரு பிரிவுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பிரதிநிதிகளுக்கு தங்குமிட வசதியின்றி RM10-ம், தங்குமிட வசதியுடன் RM30-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்துலகப் பிரதிநிதிகளுக்கு தங்குமிட வசதியின்றி RM100-ம், தங்குமிட வசதியுடன் RM150-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு நிகழ்ச்சி முழுவதும் உணவு வழங்கப்படும். மேலும், மலேசியத் திரெங்கானு பல்கலைக்கழக மாணவர்களுக்கு அனைத்துலகத் தகுதிப் புள்ளிகளும், பங்கேற்பாளர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழும் சிறப்பு நினைவுப் பரிசும் வழங்கப்படும். இதனுடன், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழிளையோருடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும், தங்களது திறமைகள், கருத்துகள் மற்றும் புதிய சிந்தனைகளை அனைத்துலக அளவில் பகிர்ந்துகொள்ளவும் இம்மாநாடு சிறந்த வாய்ப்பாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவின் சார்பில் இம்மாநாட்டில் பங்கேற்க விரும்பும் தமிழிளையோர் கீழ்க்கண்ட இணைய இணைப்பின் வாயிலாகப் பதிவுசெய்யலாம்.
பதிவுக்கான இணைய இணைப்பு:
https://forms.gle/9TJ7xQTsjq2JV5Xs9
மேலதிக விவரங்களுக்கு கீழ்க்கண்ட எண்களில் தொடர்புகொள்ளலாம்:
- தன்யாஷினி: 011-21215303
- சத்யா: 010-2355096
- தேவதர்ஷினி: 011-21522018
மலேசியத் தமிழிளையோரின் திறமைகளையும் ஆற்றல்களையும் அனைத்துலக அரங்கில் வெளிப்படுத்தும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அதிகமான இளையோர் மாநாட்டில் பங்கேற்குமாறு பரதம் பண்பாட்டுக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.








