கோலாலம்பூர், 04 நவம்பர் 2026 : மலேசியாவில் தனது ஐந்தாண்டு கால செயல்பாட்டைக் கொண்டாடும் வகையில், புதுப்பிக்கப்பட்ட கோலாலம்பூர் அலுவலகத்தைத் திறந்து வைத்துள்ள லைஃப்வேவ் (LifeWave), 2027ஆம் ஆண்டில் தனது வணிகச் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், ஊட்டச்சத்துத் துறையில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
உலகளாவிய நலவாழ்வுத் தொழில்நுட்ப நிறுவனமான லைஃப்வேவின் மலேசியப் பிரிவான லைஃப்வேவ் (M) Sdn Bhd, தனது எதிர்கால வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒளிச்சிகிச்சைத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பேட்ச் (Phototherapy Patches) தயாரிப்புகளுக்கு அப்பால், பல்வேறு நலவாழ்வுத் தீர்வுகளை அறிமுகப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, 2027ஆம் ஆண்டில் ஊட்டச்சத்துப் பிரிவிலும் தனது தயாரிப்புத் தொகுப்பை விரிவுபடுத்த லைஃப்வேவ் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு நலவாழ்வுத் தேவைகளுக்கான தீர்வுகளை வழங்குவதுடன், மலேசியச் சந்தையில் தனது வர்த்தக வாய்ப்புகளையும் அதிகரிக்க அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.
லைஃப்வேவ் மலேசியாவின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் புதுப்பிக்கப்பட்ட கோலாலம்பூர் அலுவலகத்தின் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டேவிட் ஷ்மிட் (David Schmidt) கலந்து கொண்டார்.



கடந்த 2021ஆம் ஆண்டு மலேசியாவில் தனது செயல்பாடுகளைத் தொடங்கிய லைஃப்வேவ், உள்ளூர் சந்தையில் தனது இருப்பை வலுப்படுத்துவதிலும், பிராண்ட் பார்ட்னர்கள் (Brand Partners) எனப்படும் வணிகக் கூட்டாளர்களின் சமூகத்தை விரிவுபடுத்துவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் (APAC) நிறுவனத்தின் வளர்ச்சி வியூகத்தில் மலேசியா முக்கியச் சந்தையாகத் திகழ்வதாகவும், இங்கு தனது வணிகக் கூட்டாளர்களின் பங்களிப்பை அதிகரித்து, நிறுவனத்தின் நலவாழ்வுத் தயாரிப்புகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டேவிட் ஷ்மிட் கூறுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மலேசியா, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் லைஃப்வேவின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கியப் பங்காற்றி வருவதாகக் குறிப்பிட்டார். மலேசியாவில் உள்ள பிராண்ட் பார்ட்னர்களின் அர்ப்பணிப்பும், அவர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள சமூகப் பங்களிப்பும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தின் திறப்பு, மலேசியச் சந்தையின் மீதான நிறுவனத்தின் நம்பிக்கையையும், நீண்டகால வளர்ச்சிக்கான அதன் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துவதாக அவர் கூறினார்.
2027ஆம் ஆண்டை முன்னிட்டு, லைஃப்வேவின் புதிய நலவாழ்வுத் தயாரிப்புகளை மலேசிய மக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், பிராண்ட் பார்ட்னர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ளவும், புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும், தங்களது வணிக வாய்ப்புகளை மேம்படுத்தவும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தருவதே நிறுவனத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கான முக்கிய நடவடிக்கையாக, கோலாலம்பூரில் அமைந்துள்ள நிறுவனத்தின் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் விரிவுபடுத்தப்பட்ட சந்திப்பு மற்றும் பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அன்றாட அலுவலகச் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாமல், அதிக எண்ணிக்கையிலான பிராண்ட் பார்ட்னர் நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை நடத்த முடியும்.
இந்த அலுவலகம் நிறுவனத்தின் நிர்வாகப் பணிகளுக்கான இடமாக மட்டுமல்லாமல், பிராண்ட் பார்ட்னர்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடவும், புதிய தகவல்களைக் கற்றுக்கொள்ளவும், தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் ஏற்ற தளமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு டேவிட் ஷ்மிட்டால் நிறுவப்பட்ட லைஃப்வேவ், நலவாழ்வுத் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறது. ஒளிச்சிகிச்சைத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட அதன் தயாரிப்புகள் நிறுவனத்தின் முக்கிய வணிகப் பிரிவாக இருந்து வருகின்றன.
தற்போது ‘Human Potential Technology’ எனப்படும் மனித ஆற்றல் மேம்பாட்டுத் தொழில்நுட்பம் என்ற பரந்த நோக்கத்தின் அடிப்படையில் தனது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விரிவுபடுத்த நிறுவனம் முயன்று வருகிறது.
மலேசியாவில் ஆறாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் லைஃப்வேவ், உள்ளூர் சந்தையில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்துதல், பிராண்ட் பார்ட்னர்களுக்கான ஆதரவை மேம்படுத்துதல் மற்றும் விரிவடைந்து வரும் தனது நலவாழ்வுத் தயாரிப்புகள் குறித்த விழிப்புணர்வை அதிகரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளது.
இதன் மூலம் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சி இலக்குகளுக்கும் பங்களிக்கத் திட்டமிட்டுள்ளது. லைஃப்வேவ் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு www.lifewave.com என்ற இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.







