பட்டர்வொர்த், 23 அக்டோபர் 2026 : மலேசியாவின் பட்டர்வொர்த்தில், MHS Butterworth Religious Bureau சார்பில் சரஸ்வதி பூஜை நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 19ஆம் தேதி மாலை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சரஸ்வதி தேவிக்குச் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. குழந்தைகள் பக்திப் பாடல்களைப் பாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். டத்தோ ஜி. ஷான் மற்றும் தேவாரம் பயிலும் மாணவர்கள் அம்மன் பாடல்களைப் பாடினர்.
மேலும், நவராத்திரி மற்றும் சரஸ்வதி பூஜையின் சிறப்புகள் குறித்து திருமதி ஆர். லோகாம்பாள் விளக்கமளித்தார். திருமதி வி.ஆர்.டி. நளினி தேவி தலைமையில் சரஸ்வதி தேவி மந்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டன. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றதுடன், பங்கேற்றவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது.
ஆன்மிக வழிபாடுகள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்ற இந்நிகழ்ச்சி, பக்தர்களிடையே ஆன்மிக உணர்வையும் பாரம்பரியக் கலாசாரத்தின் மீதான ஆர்வத்தையும் வளர்க்கும் வகையில் அமைந்தது.







