நீரிழிவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவருக்கு கடந்த சில நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. செப். 1ம் தேதி மேக்ஸ் பல் நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் செப்.10 ம் தேதி அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடுகள் நடப்பதாகவும், அதற்கான பரிசோதனைகளை அவர் மேற்கொண்டுள்ளதாகவும்,. நாளை மதியம் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.