நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து தாக்கும் அணுஆயுதம ஏவுகணைகளை தயாரித்து வரும் பாகிஸ்தான்

நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து தாக்கும் அணுஆயுதம ஏவுகணைகளை தயாரித்து வரும் பாகிஸ்தான்

2

பாகிஸ்தான் அணுஆயுத நிபுணர் ஷெரீன் எம்.மசாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நிலத்தில் இருந்து அணுஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் ஏவுகணை, குறுகிய தூர ஏவுகணைகளை பாகிஸ்தான் தயாரித்துள்ளது. மேலும் 640 கி.மீ. தொலைவுக்கு பாயும் ஏவுகணைகளை தயாரித்து வைத்திருக்கிறது. தற்போது 5 நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து பாய்ந்து சென்று தாக்கும் அணுஆயுத ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது.

கடல் வழி அணுஆயுத ஏவுகணைகள் தயாரிக்கும் பணி ஓராண்டுக்குள் நிறைவு பெறும். நமது நாட்டிலேயே தேவையான அளவு அணுஆயுத ஏவுகணைகளைத் தயாரித்து கொள்வோம். இதன்மூலம் அணுஆயுத தாக்குதலை சமாளிக்கும் சக்தியை பெறுவோம் என்று கூறினார்.