ஜப்பான், 30 செப்டம்பர் 2026 : 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் செபக்தக்ரா ஆடவர் ரெகு பிரிவில் மலேசிய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் மலேசிய அணி தாய்லாந்து அணியை எதிர்கொண்டது. இதில் 0–2 என்ற கணக்கில் மலேசிய அணி தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது.
மலேசிய அணியில் முகமது அஸ்லான் அலியாஸ், முஹம்மது அஃபிபுத்தீன் முகமது ரசாலி, ஐதில் ஐமான் அஸ்வாவி, ஸுல்கிஃப்லி அப்த் ரசாக் மற்றும் முஹம்மது ஸயிர் முகமது ரோஸ்டி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இப்பிரிவில் தாய்லாந்து அணி தங்கப் பதக்கத்தையும், மலேசிய அணி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றன. பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் அணிகள் வெண்கலப் பதக்கங்களைப் பகிர்ந்து கொண்டன.
மலேசிய அணியின் இந்தச் சாதனைக்கு மலேசிய தேசிய ஒலிம்பிக் கவுன்சில் (NOC Malaysia) வாழ்த்து தெரிவித்துள்ளது.







