என் தமிழ்

பினாங்கில் மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில மன்றம் சார்பில் கூட்டுப் பிரார்த்தனை

பினாங்கு, 30 செப்டம்பர் 2026 : மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில மன்றத்தின் மகளிர் பிரிவு மற்றும் புக்கிட் மெர்தாஜாம் கிளை மகளிர் பிரிவு இணைந்து ஏற்பாடு செய்த கூட்டுப் பிரார்த்தனை நிகழ்ச்சி செப்டம்பர் 27ஆம் தேதி புக்கிட் மெர்தாஜாமில் உள்ள ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பெண்கள் ஒன்றிணைந்து ஆன்மிக ஒற்றுமையுடன் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக சீர்தட்டு, கோலாட்டம் மற்றும் கும்மி உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்வுகள் இடம்பெற்றன. தொடர்ந்து தேவாரம், பஜனைகள், பிரார்த்தனை மற்றும் தீப ஆராதனை நடைபெற்றன.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில மன்றத்தின் மகளிர் பிரிவு துணைத் தலைவி தொண்டர்மணி கே. கோகிலம் PJM கௌரவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சிறப்பு உரையும் இடம்பெற்றது.

இந்த ஆன்மிக நிகழ்வை புக்கிட் மெர்தாஜாம் கிளை மகளிர் பிரிவு தலைவி திருமதி எம். கல்யாணி தலைமையிலான குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பல்வேறு உள்ளூர் கிளைகளின் மகளிர் பிரிவு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பெண்களை ஒன்றிணைத்து ஆன்மிக ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வின் நிறைவில், அனைவருக்கும் அமைதி, ஒற்றுமை மற்றும் வளம் கிடைக்க வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது.

Scroll to Top