கோலாலம்பூர், 25 செப்டம்பர் 2026 : இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால திரைப்பயணத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள ‘ஒன்றா இரண்டா’ இசை விழாவிற்கான முதன்மை ஆதரவாளர்கள் சந்திப்பு கோலாலம்பூரில் நடைபெற்றது. செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சிறப்பு சந்திப்பில் விழாவின் ஆதரவாளர்கள் மற்றும் கூட்டாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு விழா ஏற்பாட்டாளர்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாலை 6 மணிக்கு பதிவு நிகழ்ச்சியுடன் தொடங்கிய சந்திப்பில் இசைக்குழுவின் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து ஆதரவாளர்களின் வருகை மற்றும் அவர்களுக்கான பாராட்டு நிகழ்வு இடம்பெற்றது. பின்னர் இரவு விருந்து மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் வகையில் ‘ஒன்றா இரண்டா’ இசை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.







