என் தமிழ்

STEM கார்னிவல் 2026 : மாநில அளவில் SJKT சரஸ்வதி தேசியவகை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை

கெடா, 24 செப்டம்பர் 2026 : கெடா மாநில அளவில் நடைபெற்ற STEM கார்னிவல் 2026-ல், SJKT சரஸ்வதி தேசிய வகை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் Water Rocket & Parachute போட்டியில் 4ஆம் இடத்தைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மாணவர்களின் இந்தச் சாதனைக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டு தெரிவித்துள்ளது. மாநில அளவிலான போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 4ஆம் இடத்தைப் பெற்றது, மாணவர்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்தப் போட்டிக்காக மாணவர்களுக்கு வழிகாட்டி, பயிற்சி அளித்து தொடர்ந்து ஊக்கமளித்த ஆசிரியர்களான திரு. எம். பாலேந்திரன் மற்றும் திரு. கார்த்திகேசன் ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களுக்கு ஆதரவாக இருந்த பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சி மற்றும் ஆதரவின் மூலம் இந்தச் சாதனை சாத்தியமானதாக பள்ளி தெரிவித்துள்ளது. மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு STEM போட்டிகளில் சிறந்து விளங்க வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Scroll to Top