என் தமிழ்

SJKT லாடாங் டைமண்ட் ஜூபிலி தேசியவகை தமிழ்ப்பள்ளியில் RBT மற்றும் STEM வாரம் தொடக்கம்

மலாக்கா, 21 செப்டம்பர் 2026 : SJKT லாடாங் டைமண்ட் ஜூபிலி தேசியவகை தமிழ்ப்பள்ளியில் 2026ஆம் ஆண்டுக்கான வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் (RBT) மற்றும் STEM வாரத்தின் தொடக்க விழா இன்று (21.09.2026) திங்கட்கிழமை நடைபெற்றது. பள்ளியின் 33ஆவது வாராந்திர அதிகாரப்பூர்வ ஒன்றுகூடலின்போது நடைபெற்ற இந்நிகழ்வில், பள்ளியின் தலைமையாசிரியை திருமதி. விஜயா தாதன் சிறப்புரையாற்றி, RBT மற்றும் STEM வாரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

மாணவர்களிடையே வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் இவ்வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனையொட்டி, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் RBT பாடப் பணிக்குழு செயலவைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.

RBT மற்றும் STEM சார்ந்த செயல்பாடுகள் மூலம் மாணவர்களின் படைப்பாற்றல், சிந்தனைத்திறன் மற்றும் தொழில்நுட்ப ஆர்வம் மேலும் வளர வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த RBT பாடப் பணிக்குழுவினருக்கு பள்ளி நிர்வாகம் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.

Scroll to Top