என் தமிழ்

Malaysia Sarong Music Run 2026 : பல்வேறு சமூகங்களை ஒன்றிணைத்த கொண்டாட்டம் – பிரதமர் பங்கேற்பு

கோலாலம்பூர், 20 செப்டம்பர் 2026 : மலேசியாவின் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களுடன் இணைந்து ‘Malaysia Sarong Music Run 2026’ நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். மலேசியர்களை ஒன்றிணைக்கும் நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றாகக் கலந்து கொண்டது மலேசியாவின் பன்முக கலாசாரத்தை வெளிப்படுத்துவதாகவும் அன்வார் தெரிவித்தார். நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கும் அது தொடர்ந்து நிலைத்திருக்க அரசாங்கம் தேவையான ஆதரவை தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் கூறினார்.

மலேசியாவின் பாரம்பரியம் எதிர்கால தலைமுறையினருக்கும் பெருமைக்குரியதாக அமையும் வகையில் இதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்து ஊக்குவிக்கப்படும் என்றும் அன்வார் தெரிவித்தார்.

Scroll to Top