என் தமிழ்

ராஷ்மிகாவின் ‘மைசா’ பட டீசர் வெளியானது : நவம்பர் 27 திரைக்கு வருகிறது

சென்னை, 21 செப்டம்பர் 2026 : ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள ‘மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ரவீந்திர புல்லே இயக்கியுள்ள இப்படம் ஆக்‌ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. படத்தில் ராஷ்மிகா கோண்டு இனத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவரை அவர் நடித்திராத வகையிலான தீவிரமான கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

டீசரில் ராஷ்மிகாவின் கதாபாத்திரம் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், நீருக்கடியில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளும் படத்தின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளன. இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ராஷ்மிகாவுடன் ஈஸ்வரி ராவ், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘மைசா’ திரைப்படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top