என் தமிழ்

மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில மன்றத்தின் 50ஆம் ஆண்டு விழா : சின்னம் வெளியீடு மற்றும் நிதி திரட்டும் விருந்து

பினாங்கு, 21 செப்டம்பர் 2026 : மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில மன்றத்தின் 50ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, 50ஆம் ஆண்டு இலச்சினை வெளியீடு மற்றும் நிதி திரட்டும் விருந்து எதிர்வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு பட்டர்வொர்த்தில் உள்ள டேவான் ஸ்ரீ மாரியம்மன் மண்டபத்தில் நடைபெறுகிறது.

மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில மன்றத்தின் 50 ஆண்டுகால சேவை, ஒற்றுமை மற்றும் சமூகப் பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வின் முக்கிய அம்சமாக மன்றத்தின் 50ஆம் ஆண்டு இலச்சினை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

மேலும், மன்றத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய மாநிலத் தலைவர்களின் சேவையைப் பாராட்டி சிறப்பு கௌரவிப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனுடன், சமூகத்திற்கு சிறப்பான சேவையாற்றிய அரசு சாரா அமைப்புகளுக்கு சேவை விருதுகளும் வழங்கப்படவுள்ளன. பினாங்கு மாநில மன்றத்தின் 50 ஆண்டுகால பயணத்தை நினைவுகூரும் இந்நிகழ்வில் அனைவரும் ஒன்றிணைந்து பங்கேற்று, இந்து சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும் வலிமைக்கும் தொடர்ந்து ஆதரவளிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Scroll to Top