என் தமிழ்

மலேசிய இந்துதர்ம மாமன்றம் ஏற்பாட்டில் இளைஞர் முகாம் 2026 : மாணவர்களுக்கு விழிப்புணர்வு, வழிகாட்டல்

பினாங்கு, 19 செப்டம்பர் 2026 : மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு கிளையின் இளைஞர் பிரிவு சார்பில் Youth Camp 2026 நிகழ்ச்சி SMK (P) Sri Mutiara பள்ளியில் வெற்றிகரமாக நடைபெற்றது. இளைஞர்களிடையே அறிவு, விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இம்முகாமில் பல்வேறு தலைப்புகளில் சிறப்பு அமர்வுகள் இடம்பெற்றன.

சட்டத்தரணி மங்களேஸ்வரி, சட்டம், பாதுகாப்பு மற்றும் அவசரகால செயல்திட்டம் குறித்து விளக்கமளித்தார். ஆசிரியர் கவிதா, ஒழுக்கம், கலாசாரம் மற்றும் குழு கலந்துரையாடல் தொடர்பான அமர்வை நடத்தினார்.

பினாங்கு ரிமாண்ட் சிறைச்சாலையைச் சேர்ந்த சார்ஜன் வித்யா, விழிப்புணர்வு மற்றும் மறுவாழ்வு தொடர்பான கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். பினாங்கு காவல்துறையைச் சேர்ந்த ASP நளினி, குற்றத்தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து விளக்கினார். டாக்டர் எஸ். மலதி நாயர், சுகாதாரக் கல்வி தொடர்பான கலந்துரையாடலில் இளைஞர்களுடன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

முகாமின் நிறைவு நிகழ்ச்சியில் மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு கிளையின் துணைத் தலைவர் தர்மமாமணி ஏ. கிருஷ்ணன், தர்மமாமணி எஸ்.வி. மணிமாறன் மற்றும் ஐயா முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இளைஞர்களின் அறிவு, விழிப்புணர்வு மற்றும் நற்பண்புகளை மேம்படுத்தும் வகையில் முகாமை ஏற்பாடு செய்த அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் நன்றி தெரிவித்தனர். மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு கிளை இளைஞர் பிரிவு, இளைஞர்களை சமூகத்துடன் இணைத்து அவர்களின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

Scroll to Top