கோலாலம்பூர், 10 செப்டம்பர் 2026 : மலேசியாவின் டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, புருனே தருசலாம் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சரான டத்தோ ஸ்ரீ செத்தியா அவாங் முகம்மது ரிஸா பின் டத்தோ பதுக்கா ஹாஜி முகம்மது யூனோஸை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, மலேசியா மற்றும் புருனே ஆகிய இரு நாடுகளின் டிஜிட்டல் துறையின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர். மேலும், இரு நாடுகளின் மக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் டிஜிட்டல் முயற்சிகள் குறித்தும் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
எதிர்காலத்தில் புருனேவுடன் டிஜிட்டல் துறையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த மலேசிய டிஜிட்டல் அமைச்சு எப்போதும் தயாராக இருப்பதாக கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார். உலகின் முக்கிய டிஜிட்டல் சக்தியாக ஆசியான் முன்னேறுவதில் மலேசியாவுக்கும் புருனேவுக்கும் முக்கிய பங்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், இரு நாடுகளின் டிஜிட்டல் வளர்ச்சியையும், பிராந்தியத்தின் டிஜிட்டல் செயல்திட்டங்களையும் மேலும் முன்னெடுப்பதற்காக மலேசியாவும் புருனேவும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் என்றும் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.







