பஹாவ், 10 செப்டம்பர் 2026 : மலேசிய இந்துதர்ம மாமன்றம் பஹாவ் அருள்நிலையம் மற்றும் கெட்கோ ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் இணைந்து தேவாரப் போட்டியை நடத்தியது. கடந்த 9-ஆம் தேதி மாலை 8.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை ஆலய மண்டபத்தில் இப்போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை கை. குமரகுருபரன், திருமதி பெ. மல்லிகா, கோ. பிரபாகரன், திரு. தியாகு மற்றும் திருமதி வீ. சரோஜா, திருமதி லோகா வினோத், திரு. சிவா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். தேவாரப் போட்டியில் 40 மாணவர்கள் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர். அவர்களுடன் 40 பெற்றோர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மாணவர்களிடையே தேவாரம் மற்றும் சைவ சமயப் பாடல்கள் குறித்த ஆர்வத்தை வளர்க்கும் வகையிலும், தமிழ்ச் சமயப் பண்பாட்டை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்திலும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.







