என் தமிழ்

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ : 25 நாட்களில் ரூ.260 கோடி வசூல்

சென்னை, 08 செப்டம்பர் 2026 : வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் உலகளவில் ரூ.260 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை நாக வம்சி தயாரித்துள்ளார். இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தின் ‘பட்டாம்பூச்சி’ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் குடும்பத் திரைப்படமாக வரவேற்பைப் பெற்றுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, வெளியான 25 நாட்களில் உலகளவில் ரூ.260 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

Scroll to Top