சிலாங்கூர், 07 செப்டம்பர் 2026 : 2026ஆம் ஆண்டுக்கான 4-ஆவது கேடபிள்யூஏஎன்எஸ் டேக்வாண்டோ கிராண்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் எஸ்.ஜே.கே.டி. புக்கிட் பாரோட் பள்ளி மாணவர் காவிந்த்ரா ஏ/எல் நாக கண்ணன் சிறப்பாகப் போட்டியிட்டு இரு பிரிவுகளில் 3-ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
அவர் ‘ஸ்பீட் பஞ்ச்’ மற்றும் ‘ஃப்ரண்ட் ஹை கிக்’ ஆகிய இரு பிரிவுகளிலும் 3-ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கங்களை வென்றார். மாணவர் காவிந்த்ராவின் இந்தச் சாதனைக்கு எஸ்.ஜே.கே.டி. புக்கிட் பாரோட் பள்ளியின் இணைப்பாட நடவடிக்கைப் பிரிவு பாராட்டு தெரிவித்துள்ளது. கடின உழைப்பும் தொடர் முயற்சியும் அவரது வெற்றிக்கு வழிவகுத்துள்ளதாகவும், அவரது திறமையை நினைத்து பள்ளி பெருமை கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் வயதிலேயே டேக்வாண்டோ விளையாட்டில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ள காவிந்த்ராவுக்கு தொடர்ந்து பயிற்சி பெற்று மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.







