ஈரான், 07 செப்டம்பர் 2026 : ஈரானில் அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் தொடங்கிய பிப்ரவரி 28ஆம் தேதி, மினாப் நகரில் உள்ள ஷஜரே தாய்பெஹ் பள்ளியும் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர்.
அதன்பின்னர் பள்ளி மூடப்பட்ட நிலையில் இருந்தது. தற்போது சேதமடைந்த பள்ளிக் கட்டிடம் போர் நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது. பள்ளிக்குள் உயிரிழந்த மாணவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 5ஆம் தேதி அங்கு சென்றபோது, உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் அவர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தி வந்தனர். பள்ளி இனி செயல்படாது என்றும், கட்டிடம் போர் அருங்காட்சியகம் மற்றும் நினைவிடமாக மாற்றப்படும் என்றும் மாகாண கவர்னர் முகமது அஷூரி தாசியானி தெரிவித்துள்ளார்.







