என் தமிழ்

சர்வதேச ஸ்பெல்லிங் பீ போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் SJKT ஆறுமுகம் பிள்ளை பள்ளி மாணவி அக்ஷயா

கெடா, 01 செப்டம்பர் 2026 : SJKT ஆறுமுகம் பிள்ளை பள்ளியைச் சேர்ந்த மாணவி அக்ஷயா மகாதேவன், 7ஆவது Eurasian World Final Spelling Bee Competition 2026 போட்டியில் Bee 3 பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆகஸ்ட் 21 முதல் 23ஆம் தேதி வரை பேராக் மாநிலம் ஈப்போவில் நடைபெற்ற இந்த சர்வதேச அளவிலான ஸ்பெல்லிங் பீ போட்டியில் 19 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன் போட்டியிட்டு தனது திறமையை வெளிப்படுத்திய அக்ஷயா மகாதேவன், Bee 3 பிரிவில் சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சர்வதேச அரங்கில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள அக்ஷயாவின் சாதனை, SJKT ஆறுமுகம் பிள்ளை பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளது.

மாணவியின் இந்த வெற்றிக்கு அவரது விடாமுயற்சி, பயிற்சி மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் முக்கிய பங்காற்றியுள்ளன. அக்ஷயா மகாதேவனின் சர்வதேச சாதனைக்கு SJKT ஆறுமுகம் பிள்ளை பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

Scroll to Top