என் தமிழ்

69ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு மலேசிய மக்களுக்கு டத்தோ ஸ்ரீ எம். சரவணன் வாழ்த்து

கோலாலம்பூர், 31 ஆகஸ்ட் 2026 : 69ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு அனைத்து மலேசியர்களுக்கும் தேசிய தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன், நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்த முன்னோர்களை நன்றியுடன் நினைவுகூர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அமைதியான, இறையாண்மை மிக்க மற்றும் வளமான மலேசியாவை உருவாக்கிய முன்னோர்களின் தியாகங்களைப் போற்றுவதுடன், சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தையும் அனைவரும் உணர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரம் என்பது கடந்த கால வரலாற்றை நினைவுகூருவது மட்டுமல்ல என்றும், ஒற்றுமையை தொடர்ந்து பாதுகாத்து, நாட்டின் பன்முகத்தன்மையை மதித்து, எதிர்கால தலைமுறையினருக்காக சிறந்த மலேசியாவை உருவாக்க வேண்டிய பொறுப்பும் அதில் அடங்கியுள்ளது என்றும் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.

மலேசியர்கள் வெவ்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் கலாசாரங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அனைவரும் மலேசிய மக்கள் என்ற ஒரே அடையாளத்தின் கீழ் ஒன்றுபட்டிருப்பதாக அவர் வலியுறுத்தினார்.

ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் தொடர்ந்து நிலைநிறுத்தி, நாட்டின் எதிர்கால தலைமுறைகளுக்கு வளமான மலேசியாவை விட்டுச் செல்ல அனைவரும் பாடுபட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அனைத்து மலேசியர்களுக்கும் 69ஆவது தேசிய தின நல்வாழ்த்துகளையும் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.

Scroll to Top