என் தமிழ்

நெகிரி செம்பிலான் முதலமைச்சர் அலுவலகம் : சிறப்பு அதிகாரியாக டத்தோ வி.எஸ். மோகன் நியமனம்

நெகிரி செம்பிலான், 28 ஆகஸ்ட் 2026 : நெகிரி செம்பிலான் மாநில முதலமைச்சர் அலுவலகத்தில், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் (EXCO) நிகரான சிறப்பு அதிகாரியாக டத்தோ வி.எஸ். மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்திற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, நெகிரி செம்பிலான் மாநில இந்தியச் சமூகத்தின் முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதில் அவரது புதிய பொறுப்பு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில மக்களின் நலன் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக புதிய பொறுப்பில் டத்தோ வி.எஸ். மோகன் சிறப்பாகப் பணியாற்றி தொடர் வெற்றிகளைப் பெற வேண்டும் என்றும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Scroll to Top