26 ஆகஸ்ட் 2026 : எடின்பர்க் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள், கெப்போங் கிளை பேங்க் ராக்யாட் நூரி கிளப்புடன் இணைந்து நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆகஸ்ட் 19ஆம் தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதலாம் நிலை மாணவர்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டியும், இரண்டாம் நிலை மாணவர்களுக்கு சிறப்பு உரையும் இடம்பெற்றன.
மேலும், மாணவர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் 20 மாணவர்களுக்கு தலா 50 ரிங்கிட் மதிப்பிலான பரிசுப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் படைப்பாற்றல், அறிவு மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்ததுடன், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் சிறந்த வாய்ப்பாக அமைந்தது.







