என் தமிழ்

மஸ்ஜித் இந்தியா பகுதியில் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் கட்டுமானப் பணிகள் : கோபிந்த் சிங் டியோ ஆய்வு

25 ஆகஸ்ட் 2026 : மஸ்ஜித் இந்தியா பகுதியில் நடைபெற்று வரும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் கட்டுமானப் பணிகளை மலேசிய அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவில் கட்டுமானப் பணிகள் நல்ல முறையில் நடைபெற்று வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் அவர் பார்வையிட்டார்.

இந்தக் கோவில் அப்பகுதியில் வாழும் இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய மையமாக அமைய வேண்டும் என கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார். வழிபாட்டுத் தலமாக மட்டுமின்றி, இந்திய சமூகத்தின் நீண்டகால நலன் மற்றும் வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையிலும் கோவில் அமைய வேண்டும் என அவர் குறிப்பிட்டார். சமூகத்தின் நலன், ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு கோவில் முக்கிய பங்காற்றும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

Scroll to Top