ஒபாமா அரசு பற்றி அமெரிக்க மக்கள் கருத்து

ஒபாமா அரசு பற்றி அமெரிக்க மக்கள் கருத்து

3

 

அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் சமீபத்தில் அந்நாட்டு மக்களிடம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில் அந்நாட்டு மக்கள் தெரிவித்த கருத்துகள் தொடர்பான விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அந்நாட்டின் வெளியுறவு, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் முறையாக கையாள தெரியாமல் பெரும் தோல்வியை சந்தித்துள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இவரது ஒட்டு மொத்தமான பணியும் பெரும் அதிருப்தியளிப்பதாகவும் பெரும்பான்மையானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.இதன்படி, அமெரிக்க அரசு தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக 66 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதேபோல், அதிபர் பதவியை ஒபாமா கையாளுவதில் மிக மோசமாக உள்ளதாக 58 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.