பெண் குழந்தைகள் பாதுகாப்பில் அரசுக்கு அக்கறையில்லை : உச்ச நீதிமன்றம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பில் அரசுக்கு அக்கறையில்லை : உச்ச நீதிமன்றம்

2

உச்சநீதிமன்றத்தில் ஜார்ஜ் மாத்யூ என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு மனுவில், கருவிலிருக்கும்போதே பாலினத்தை அறிந்து பெண் குழந்தையாக இருந்தால் அதை கலைத்து விடும் போக்கு அதிகரித்து வருவதற்கு காரணம். கருவிலேயே பாலினத்தை அறிவதை தடை செய்யும் சட்டத்தை மத்திய-மாநில அரசுகள் முறையாக அமல்படுத்தவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். 1994ம் ஆண்டில் கருவிலேயே பாலினத்தை அறிவதை தடை செய்யும் சட்டத்தின் கீழ் தேசிய அளவில் ஒரு கண்காணிப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது அக்கமிட்டியின் பணியே இச்சட்டம் முறையாக அமல்படுத்துவதை கண்காணிப்பதுதான்.

இவர் தொடர்ந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் என்.வி ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு மத்திய, மாநில அரசுகள் இச்சட்டத்தை மந்த கதியில் அமல்படுத்துகிறது. கருவிலேயே கொல்லப்படுவதால் பெண் குழந்தைகள் குறைந்து வரும் அபாயத்தை பற்றி விழிப்புணர்வு ஊட்ட அரசுகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதற்கான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவுமில்லை அரசு பெண் குழந்தைகளை பாதுகாக்க என்னதான் செய்கிறது. இவ்வாறு நீதிபதிகள் தமது தீர்ப்பில் கன்டனம் தெரிவித்திருந்தனர்.