23 ஆகஸ்ட் 2026 : மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் நாவல் போட்டி நடத்தப்பட்டு, அதற்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக யுனேஸ்வரன் ராமராஜ் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
எழுத்துத்துறையில் வளர்ந்து வரும் புதிய திறமைகளை, குறிப்பாக இளைஞர்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில் இந்த நாவல் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற படைப்பாளியின் நூல் வெளியிடப்பட்ட நிகழ்வும் விழாவில் இடம்பெற்றது. புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இயல் மன்றம் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி பாராட்டுக்குரியது என யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார். மேலும், இளைஞர்களின் எழுத்தாற்றல் தொடர்ந்து வளர்ந்து, தமிழ் இலக்கியத்தில் புதிய படைப்புகள் உருவாக வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.







