சுங்கை பூலோ, 23 ஆகஸ்ட் 2026 : சுங்கை பூலோ கம்போங் பாருவில் நடைபெற்ற சமூக நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு, அப்பகுதி மக்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். கம்போங் செரி சுங்கை பூலோ JPKK ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவசமாக மிதிவண்டிகளை வழங்கினார். மேலும், குழந்தைகளுக்கு சிறிய அளவில் பணப் பரிசுகளையும் வழங்கி அவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
குழந்தைகள் புதிய மிதிவண்டிகளைப் பெற்றுக் கொண்டபோது அவர்களின் முகங்களில் தெரிந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் தமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். இந்த சிறிய பரிசுகள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுடன், அவர்களின் நினைவில் இனிய அனுபவமாகவும் இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.







