என் தமிழ்

செர்பியாவில் காட்டுத்தீ : அதிநவீன ‘வாட்டர் பாம்பர்’ விமானத்தை அனுப்பிய புதின்

செர்பியா, 20 ஆகஸ்ட் 2026 : செர்பியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்காக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அதிநவீன ஐஎல்-76 ‘வாட்டர் பாம்பர்’ கனரக விமானத்தை செர்பியாவுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

செர்பியாவின் அடர்ந்த வனப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ, பலத்த காற்று காரணமாக வேகமாக அடுத்தடுத்த பகுதிகளுக்கும் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வந்தபோதிலும், தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா அனுப்பியுள்ள ஐஎல்-76 விமானம், ஒரே முறையில் சுமார் 42 டன் தண்ணீரை எடுத்துச் சென்று, வானிலிருந்து தீப்பரவல் பகுதிகளில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்துடன் ரஷ்யாவின் சிறப்பு மீட்புப் படையினரும் செர்பியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். காட்டுத்தீயை கட்டுப்படுத்த ரஷ்யா வழங்கியுள்ள உதவிக்கு செர்பிய அரசு நன்றி தெரிவித்துள்ளது.

Scroll to Top