கோலாலம்பூர், 04 அக்டோபர் 2026 : மலேசியா மற்றும் சென்னையைச் சேர்ந்த தொழில்முனைவோர், வர்த்தகத் தலைவர்கள் மற்றும் வணிகத் துறைப் பிரதிநிதிகளுக்கு இடையே வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைச் சம்மேளனம் (MAICCI) சார்பில் சென்னையைச் சேர்ந்த பிஎன்ஐ (BNI) பிரதிநிதிகளுடன் வர்த்தகத் தொடர்பு விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்தச் சந்திப்பு, இரு தரப்பினரும் நேரடியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும், வணிகக் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், புதிய கூட்டாண்மை வாய்ப்புகளை ஆராயவும் சிறந்த தளமாக அமைந்தது.
தொழில்முனைவோர், வணிகத் தலைவர்கள், தொழில்முறை நிபுணர்கள் மற்றும் பல்வேறு தொழில் துறைப் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சி, மலேசியா மற்றும் சென்னை வணிகச் சமூகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் உறவுகளையும் மேம்படுத்துவதில் முக்கியத்துவம் பெற்றது.
புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்குதல், கருத்துப் பரிமாற்றம் மற்றும் நீடித்த வர்த்தக உறவுகளை வளர்த்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.







