செராஸ், 19 ஆகஸ்ட் 2026 : செராஸ் செம்பாக்கா தேசியப் பள்ளியைச் சேர்ந்த 9 வயது மாணவி சாராணி ரகுநாத், ருமேனியாவில் நடைபெற்ற 14ஆவது HIPPO English Without Borders தேசிய போட்டியின் Little Hippo பிரிவில் முதலிடம் பெற்று மலேசியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். ஆகஸ்ட் 8 முதல் 16ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட சாராணி, அடுத்ததாக செப்டம்பர் மாதம் இத்தாலியில் நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில் மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார்.
சிறு வயதிலேயே சர்வதேச அளவிலான போட்டியில் சிறப்பான சாதனையைப் படைத்துள்ள சாராணி, கல்வியுடன் விளையாட்டு, நீச்சல் மற்றும் ஓவியம் ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் மற்ற மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில் சாராணி சிறப்பாக செயல்பட்டு மலேசியாவுக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.






