கோலாலம்பூர், 03 அக்டோபர் 2026 : மலேசிய இந்திய சமூகத்தைப் பாதிக்கும் பல்வேறு சவால்களுக்குச் செயல்முறைத் தீர்வுகளை உருவாக்கும் நோக்கில், சுகம் பாரம்பரியம் மற்றும் கலாசார அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடாடும் தர்ம ஆய்வகம் (Interactive Dharma Lab – IDL) நிகழ்ச்சியில் இளம் பங்கேற்பாளர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் எட்டு அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணிக்கும் சமூகத்தைப் பாதிக்கும் ஒரு குறிப்பிட்ட சவால் ஒதுக்கப்பட்டு, அதற்கான நடைமுறைத் தீர்வுகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.







