என் தமிழ்

PJ Startup Festival 2026 : AI வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு முக்கியம் – கோபிந்த் சிங் தியோ

பெட்டாலிங் ஜெயா, 16 ஆகஸ்ட் 2026 : பெட்டாலிங் ஜெயா நகரில் ஏழாவது முறையாக நடைபெற்ற PJ Startup Festival, தொடக்க நிறுவனங்கள், தொழில்முனைவோர், புத்தாக்க சிந்தனையாளர்கள் மற்றும் சமூக அமைப்புகளை ஒன்றிணைக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது. இதில் கோபிந்த் சிங் தியோ கலந்து கொண்டார்.

மாநிலத்தில் தொடக்க நிறுவனங்களின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிப்பதுடன், நகர சமூகத்தினருக்கும் தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கத் துறையினருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும் நோக்கில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

விழாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. AI பயிலரங்குகள், வேலைவாய்ப்பு வாய்ப்புகள், Space Camp உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன், AI கட்டமைப்பு, Agentic AI, AI மூலம் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் மற்றும் செயலி உருவாக்கம் தொடர்பான சிறப்பு பகிர்வுகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சிகள் பங்கேற்பாளர்களுக்கு AI குறித்த அறிவையும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான தயார்நிலையையும் மேம்படுத்த உதவியதாக கோபிந்த் சிங் தியோ தெரிவித்தார். PJ Startup Festival என்பது வார இறுதி நிகழ்வாக மட்டும் இல்லாமல், AI தொழில்நுட்பத்தின் வாய்ப்புகளைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் புதிய வெற்றிகளையும் முன்னேற்றங்களையும் உருவாக்க விரும்பும் இளைஞர்கள் மற்றும் புத்தாக்க சிந்தனையாளர்களை ஊக்குவிக்கும் முக்கிய தளமாக விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Scroll to Top