செபாங், 05 ஆகஸ்ட் 2026 : 2026 கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் சிறப்பான சாதனை படைத்த மலேசிய தேசிய அணி, தனது போட்டிப் பயணத்தை நிறைவு செய்து இன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை (KLIA) வந்தடைந்தது. இப்போட்டியில் மலேசியா 8 தங்கம், 3 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 16 பதக்கங்களை வென்று வெற்றிகரமாக தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தது.
மலேசியா வென்ற 8 தங்கப் பதக்கங்கள், 2010ஆம் ஆண்டு இந்தியாவின் நியூடெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 12 தங்கப் பதக்கங்களை வென்றதற்குப் பிறகு, நாட்டின் சிறந்த செயல்திறனாகப் பதிவாகியுள்ளது. விமான நிலையத்தில் வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், நாட்டிற்கு பெருமை சேர்த்த அவர்களின் சாதனைக்கு விளையாட்டு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.






