பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்தை பிரிப்பதற்கான கருத்து வாக்கெடுப்பு நேற்று ஸ்காட்லாந்தில் நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த கருத்து வாக்கெடுப்பு இரவு 10 மணி வரை நடைபெற்றது. மொத்த மக்கள் தொகையான 43 லட்சம் பேரில் 97 சதவீதம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இன்று பகலில் முடிவு தெரியும்.