காஷ்மீர் பகுதியிலிருந்து பின்வாங்கும் சீன ராணுவம்.

காஷ்மீர் பகுதியிலிருந்து பின்வாங்கும் சீன ராணுவம்.

3

 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லே பகுதிக்கு அருகே இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீன ராணுவத்தினர் கடந்த 4 நாட்களாக அத்துமீறி முகாமிட்டு இருந்தனர். இதனால் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், நேற்று இரவு சீன ராணுவத்தினர் வாபஸ் பெறத் தொடங்கினர். இரவு 10 மணிக்கு அவர்களது எல்லைக்குட்பட்ட பகுதிக்கு திரும்பிச் செல்ல தொடங்கினர்.

சீன ராணுவம் பின்வாங்கியதற்கு மோடியின் நடவடிக்கைகளே காரணம் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். கடந்த 12 நாட்களாக இந்திய எல்லைக்குள் ஊடுருவி இந்திய எல்லைக்குள் முகாமிட்டிருந்த சீன ராணுவத்தினர் 600 பேர் நேற்றிரவு முதல் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.