நெகிரி செம்பிலான், 01 ஆகஸ்ட் 2026 : நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, முன்னாள் MIC தேசிய துணைத் தலைவரான டி. மோகன், தனது ஆதரவாளர்களுடன் போர்ட் டிக்சனில் உள்ள SJK(T) போர்ட் டிக்சன் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
வாக்குச்சாவடிக்கு வருகை தந்த வாக்காளர்களுடன் கலந்துரையாடிய அவர், ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின் முக்கியக் கடமை என்றும் வலியுறுத்தினார். மேலும், இன்னும் வாக்களிக்காத அனைத்து வாக்காளர்களும் மாலை 6.00 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்கை பதிவு செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
ஒவ்வொரு வாக்கும் மாநிலத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கியமானதாகும் என்றும், சிறந்த எதிர்காலத்தை உருவாக்க அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் டி. மோகன் வலியுறுத்தினார்.






