பேராக், 15 செப்டம்பர் 2026 : மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் ஏற்பாட்டில் இந்து தர்ம வகுப்பு செப்டம்பர் 15ஆம் தேதி கம்போங் ஊத்தான், தெலுக் இந்தான் பகுதியில் நடைபெற்றது. மாணவர்களுக்கான இவ்வகுப்பு மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது.
இவ்வகுப்பில் அபிராமி அந்தாதி மற்றும் தேவாரம் ஆகியவை பாடங்களாக கற்பிக்கப்பட்டன. மொத்தம் 35 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, இந்து சமயப் பாடல்கள் மற்றும் ஆன்மிகப் பாரம்பரியங்களை கற்றுக்கொண்டனர். வகுப்பிற்கு திருமதி தேவகி மேனன் மற்றும் திருமதி கிருஷ்ணம்மாள் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து மாணவர்களுக்கு வழிகாட்டினர்.
மேலும், திரு. கிருஷ்ணன் சுப்பிரமணியன் அவர்கள் ‘அபிராமி அந்தாதி பாராயணப் பெருவிழா’ நூலை வழங்கியதுடன், அதில் இடம்பெற்றுள்ள அபிராமி அந்தாதி குறித்தும் மாணவர்களுக்கு விளக்கமளித்தார். அவரது பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இவ்வகுப்பு மாணவர்களிடையே தமிழ் சைவ சமய இலக்கியங்கள் மற்றும் ஆன்மிகப் பாரம்பரியங்கள் குறித்த ஆர்வத்தை வளர்க்கும் வகையில் அமைந்தது. வகுப்பு இரவு சிற்றுண்டியுடன் நிறைவடைந்தது.







