கோலாலம்பூர், 27 ஜூலை 2026 : 2026–2028 காலகட்டத்திற்கான மலேசிய தேசிய வர்த்தக மற்றும் தொழில்துறை பேரவையின் (NCCIM) புதிய நிர்வாகப் பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் (MAICCI) மூன்று நிர்வாகிகளுக்கு MAICCI தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
MAICCI துணைத் தலைவரான டத்தோ டாக்டர் ஏ.டி. குமாரராஜா, NCCIM அமைப்பின் துணைத் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, MAICCI பொதுச் செயலாளர் எம்.எஸ். தார்ச்சனா பாண்டியன், NCCIM துணைப் பொதுச் செயலாளராகவும், MAICCI துணைப் பொதுச் செயலாளர் எஸ். ஞானசம்பந்தன் (PJK), NCCIM துணைப் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்கள், அவர்கள் தொழில்துறை மற்றும் வணிக சமூகத்தின் முன்னேற்றத்திற்காக ஆற்றிவரும் அர்ப்பணிப்பு, சிறந்த தலைமைத்துவம் மற்றும் சேவைக்கான அங்கீகாரமாக அமைந்துள்ளதாக MAICCI தெரிவித்துள்ளது.
மேலும், புதிய பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டு, NCCIM மற்றும் நாட்டின் வணிகத் துறையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.






