நெகிரி செம்பிலான், 26 ஜூலை 2026 : நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, தெமியாங் சட்டமன்றத் தொகுதிக்கான பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஹோ வெங் வாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் டிஏபி தேசியத் தலைவரும், டிஜிட்டல் அமைச்சருமான கோபிந்த் சிங் டியோ கலந்து கொண்டார்.
நிகழ்வில் உரையாற்றிய அவர், தெமியாங் தொகுதி வேட்பாளர் ஹோ வெங் வாவுக்கு ஆதரவாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் இணைந்து பிரசாரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். மேலும், வாக்காளர்கள் தங்களது ஜனநாயக உரிமையை பொறுப்புடன் பயன்படுத்தி சரியான தேர்வை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
நெகிரி செம்பிலான் மாநிலம், உறுதியான தலைமையுடனும் தெளிவான கொள்கைகளுடனும் செயல்படும் பக்காத்தான் ஹராப்பான் அரசின் கீழ் தொடர்ந்து முன்னேற தகுதியானது என்றும், BN–PN கூட்டணியுடன் ஒப்பிடும்போது பக்காத்தான் ஹராப்பான் மட்டுமே நிலையான மற்றும் மக்கள்மைய ஆட்சியை வழங்கும் திறன் கொண்டது என்றும் அவர் கூறினார்.
வரவிருக்கும் மாநிலத் தேர்தல், நெகிரி செம்பிலானின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான வாய்ப்பாகும் என்றும், மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க பக்காத்தான் ஹராப்பான் முழுமையாக தயாராக இருப்பதாகவும் கோபிந்த் சிங் டியோ நம்பிக்கை தெரிவித்தார்.






