சிலாங்கூர், 06 செப்டம்பர் 2026 : பிரிமா டாமன்சாராவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ‘அம்பாங் மெர்டேக்கா’ இரவு கொண்டாட்டம் உள்ளூர் சமூக மக்களின் உற்சாகமான பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.
மூத்தவர்கள் ஒருவருக்கொருவர் அன்புடன் கலந்துரையாடியும், இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றும் கொண்டாட்ட நிகழ்வு களைகட்டியது. பல்வேறு வயதினரும் சமூகத்தினரும் ஒன்றிணைந்ததால், அப்பகுதியில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் மகிழ்ச்சியான சூழல் நிலவியது.
மலேசியாவின் சுதந்திர தினக் கொண்டாட்டம் சமூகங்களுக்கிடையேயான ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்றும், அனைவரும் இணைந்து அமைதியான, வளமான மற்றும் நலமான மலேசியாவை உருவாக்க தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தினார்.
சமூக நல்லிணக்கத்தையும் நாட்டின் மீதான ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் பிரிமா டாமன்சாரா மக்களின் பங்கேற்புடன் இந்த சுதந்திர தினக் கொண்டாட்டம் நடைபெற்றது.







