என் தமிழ்

சரவாக் தின வாழ்த்து : சரவாக் டிஜிட்டல் வளர்ச்சியின் முன்னோடி என கோபிந்த் சிங் டியோ புகழாரம்

22 ஜூலை 2026 : சரவாக் மாநிலம், மலேசியாவின் டிஜிட்டல் மாற்றப் பயணத்தில் முக்கிய பங்காற்றி வருவதுடன், மாநில அரசும் கூட்டாட்சி அரசும் இணைந்து செயல்பட்டால் நாட்டின் வளர்ச்சியை எவ்வாறு விரைவுபடுத்த முடியும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

சரவாக் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள தனது வாழ்த்துச் செய்தியில், டிஜிட்டல் வளர்ச்சியில் சரவாக் இதுவரை பல குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளதாகவும், எதிர்காலத்திலும் மேலும் பல வெற்றிகளைப் பெற்று நாட்டின் முன்னேற்றத்தை வழிநடத்தும் சக்தியாகத் திகழும் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.

மேலும், சரவாக் தினம் ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை கொண்டாடும் அரிய நாளாக அமைய வேண்டும் என்றும், மாநிலத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் வளத்திற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சரவாக் மக்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த சரவாக் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்த கோபிந்த் சிங் டியோ, மாநிலத்தின் வளர்ச்சிப் பயணம் நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து வலுசேர்க்கும் எனக் குறிப்பிட்டார்.

Scroll to Top