என் தமிழ்

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் : அரையிறுதிக்கு முன்னேறிய மலேசிய ஜோடி அஸ்ரியன்-டான்

சீனா, 05 செப்டம்பர் 2026 : சீனா மாஸ்டர்ஸ் 2026 பேட்மிண்டன் போட்டியில் மலேசியாவின் நூர் முஹம்மது அஸ்ரியன் ஆயுப் – டான் வீ கியோங் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. காலிறுதிச் சுற்றில் இந்தோனேசியாவின் ஆறாம் நிலை வீரர்களான சபார் கார்யமான் குடாமா – முகமட் ரெசா பஹ்லேவி இஸ்ஃபஹானி ஜோடியை எதிர்கொண்ட மலேசிய ஜோடி, கடும் போட்டிக்குப் பின்னர் 21-17, 16-21, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

58 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு ஜோடிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் மலேசிய ஜோடி ஆதிக்கம் செலுத்தி வெற்றியைத் தட்டிச் சென்றது. இந்த வெற்றியின் மூலம் நூர் முகமட் அஸ்ரியன் ஆயுப் – டான் வீ கியோங் ஜோடி சீனா மாஸ்டர்ஸ் 2026 தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த வெற்றி மலேசிய பேட்மிண்டன் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Scroll to Top