என் தமிழ்

மலேசிய இந்து சங்கத்தின் 49ஆவது பேராளர் மாநாடு நிறைவு : தேசியத் தலைவராக மீண்டும் தேர்வானார் காசி சங்கபூஷன் தங்க கணேசன்

சிலாங்கூர், 22 ஜூலை 2026 : மலேசிய இந்து சங்கத்தின் (Malaysia Hindu Sangam) 49ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் (Annual General Meeting) சிலாங்கூர் மாநிலம் சுபாங் ஜெயாவில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் ஸ்ரீ காசி சங்கபூஷன் தங்க கணேசன் AMN தலைமை தாங்கினார். இதில் தேசிய செயற்குழு உறுப்பினர்கள், மத்திய மன்ற உறுப்பினர்கள், மாநிலத் தலைவர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஆலயங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பினாங்கு மாநில இந்து சங்கத்தை அதன் தலைவர் விவேக ரத்னா தர்மன் ஆனந்தன் PKT, PJK, PJM தலைமையிலான மாநில செயற்குழுவினர் பிரதிநிதித்துவப்படுத்தி, இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதன் போது நடைபெற்ற தேர்தலில், ஸ்ரீ காசி சங்கபூஷன் தங்க கணேசன் மீண்டும் மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய செயற்குழு உறுப்பினர்கள், ஒன்பது மத்திய மன்ற உறுப்பினர்கள் மற்றும் விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

புதிய நிர்வாகத்தின் தலைமையில், மலேசிய இந்து சங்கம் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தி, இந்து சமயப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, அமைப்பை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

Scroll to Top